Tamilதமிழ்
Comprehension — 10 previous-year questions
Every Comprehension question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 10questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
"ஓங்கு தண்பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்" இவ்வடியில் நீப வனம் என்பது- கடம்பவனம்✓
- உவவனம்
- பாலைவனம்
- மலர்வனம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
(பத்தி வினா [90-92]) வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?- நேதாஜி
- பாரதியார்✓
- பாரதிதாசன்
- திரு.வி.க.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல். [90-92]
இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ. சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?- வ.உ. சிதம்பரனார்✓
- பாரதியார்
- சுபாஷ் சந்திரபோஸ்
- பாரதிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பெயரைச் சொல்லும்போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி குற்றாலம். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்றழைக்கப்படும் அருவியைக் கண்டறிக.- ஆகாயகங்கை அருவி
- கேத்ரின் அருவி
- சுருளி அருவி
- குற்றால அருவி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன- எட்வர்டு மைபிரிட்ச்
- ஈஸ்ட்மன்
- தாமஸ் ஆல்வா எடிசன்
- பிரான்சிஸ் சென்கின்சு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
"பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்" – இவ்வடியில் பூவையும் என்பது ————— குறிக்கும்.- மயில்கள்
- பெண்கள்
- நாகணவாய்ப் பறவைகள்✓
- மரங்கொத்திப் பறவைகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தவறான இணை எது?- மணித்தக்காளி — வாய்ப்புண்
- முசுமுசுக்கை வேர் — இருமல்
- அகத்திக் கீரை — கண்நோய்✓
- வேப்பங்கொழுந்து — மார்புச்சளி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பொருந்தாத இணை எது?- மேற்கு மலையில் இருந்து வந்தவை — சந்தனம், ஆரம்
- கீழ்க்கடலில் விளைந்தவை — பவளம்
- வடமலையில் இருந்து வந்தது — கறி (மிளகு)✓
- தென்கடலில் இருந்து கிடைத்தவை — முத்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
தமிழ் வளர்ச்சித் துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2024-20251.6 - கனவு இல்லம் :
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “கனவு இல்லம் திட்டம்” தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, சாகித்ய அகாதெமி, ஞானபீட விருது, தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது (தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு மட்டும்) மற்றும் நோபல் பரிசு இலக்கியம் (தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளுக்கு பெற்றிருப்பின்) ஆகிய விருதுகளைப் பெற்ற விருதாளர்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக 10 விருதாளர்களுக்கு வீடு வழங்கப்படுகிறது.
‘கனவு இல்லத் திட்டத்தின்’ சார்பாக ஒவ்வொரு நிதியாண்டிலும் எத்தனை விருதாளர்களுக்கு இல்லம் வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிக.- 9
- 17
- 8
- 10✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
(பத்தி வினா [90-92]) வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?- சமஸ்கிருதம், தமிழ்
- ஆங்கிலம், கன்னடம்
- தமிழ், ஆங்கிலம்✓
- மலையாளம், தமிழ்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →